Saturday 4th of May 2024 07:39:41 AM GMT

LANGUAGE - TAMIL
.
டேவிட் அமேஸ் எம்.பியின் மறைவு பேரிழப்பு என பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் இரங்கல்!

டேவிட் அமேஸ் எம்.பியின் மறைவு பேரிழப்பு என பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் இரங்கல்!


தீவிரவாத சம்பவத்தில் கத்தியாவில் குத்தி நேற்று படுகொலை செய்யப்பட்ட பிரிட்டன் - செளத் எண்ட் வெஸ்ட் தொகுதி கன்சர்வேடிவ் எம்.பியும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் உறுப்பினருமான சோ் டேவிட் அமேஸூக்கு பிரித்தானிய தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ. பகுதியில் உள்ள பெல்பேர்ஸ் தேவாலயத்தில் தமது தொகுதிவாசிகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது டேவிட் அமேஸ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

1983ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் எம்.பியாக இருக்கும் டேவிட் அமேஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இத்தத் தாக்குதல் சம்பவம் ஒரு தீவிரவாத செயல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட டேவிட் அமேஸ் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் உறுப்பினராவார்.

விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் உட்பட பிரித்தானிய தமிழ் சமூகத்தால் நடத்தப்படும் நிகழ்வுகளில் அமேஸ் அடிக்கடி கலந்து கொள்வார், மேலும் இலங்கையில் நடக்கும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக அவர் அடிக்கடி குரல் கொடுத்து வந்தார்.

2018 ஆம் ஆண்டில், சர்வதேச கட்டாய காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, அவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்தார்.

இந்நிலையில் சோ் டேவிட் அமேஸ் மறைவு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இரங்கல் வெளியிட்டுள்ளன.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE